சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
விக்டோரியா மருத்துவமனையில் (Victoria Hospital) சிகிச்சை பெற்று வரும் சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.
நேற்று முன் தினம் மாலை சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு உடனடியாக ஸ்கான் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.