சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017 ஆம் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்க சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் சசிகலாவின் தண்டனைக்காலம் முடிவடைந்து எதிர்வரும் 27ஆம் திகதி சசிகலா விடுதலையாகவுள்ளார் என்று சிறைத்துறையினர் அறிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
அவர்களது தண்டனை காலம் முடிவடைவதை தொடர்ந்து இளவரசி அடுத்த மாதம் 5 ஆம் திகதியும், சுதாகரன் அபராத தொகை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா விடுதலை செய்யப்படுவதை ஒட்டி அ.ம.மு.க.வினர் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சசிகலாவை வரவேற்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அவர்கள் செய்து வருகிறார்கள்.
சிறைத்துறை தகவல்படி சசிகலா 27 ஆம் திகதி காலை 10 மணிக்கு விடுதலை ஆவார் என தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வினர் 26ஆம் திகதியே பெங்களூருவுக்கு செல்கின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று சசிகலாவை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்காக வான்கள், சுற்றுலா வாகனங்கள், கார்கள் அனைத்தும் வாடகைக்கு பதிவு செய்துள்ளார்கள். வாகன எண்களோடு அவற்றை பதிவு செய்து உரிய சுங்க கட்டணத்தை செலுத்தும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
நன்றி :மாலைமலர்