மரக்கறிகளின் கையிருப்பு அதிகரிப்பு காரணமாக மரக்கறிகளின் விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விலை தற்போது 100 ரூபாயாகவும், 700 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கறிமிளகாய் 250 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளதாக பேலியகொட மெனிங் சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ கரட்டின் விலை 450 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், ஒரு கிலோ கோவாவின் விலை 300 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
