தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ 18.02.2021 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதுவரை இருந்து வந்த தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு தேசிய பாதுகாப்பு, இடர் முகாமைத்துவம் மற்றும் உள்நாட்டலுவல்கள் என இரண்டு இராஜாங்க அமைச்சுக்களின் கீழ் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து இந்த புதிய பதவிப் பிரமாணம் இடம்பெற்றது.