தலவாக்கலை நகரிலுள்ள அனைத்துக் கடைகளையும் நாளை (05.02.2021) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கமல் சமரவீர தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை ரூபா 1,000 ஆக உயர்த்துவதற்காக தோட்ட கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நாளை நாடு தழுவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைா்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இ.தொ.கா தோட்டத் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தலவாக்கலை – லிந்துலை நகர சபைத் தலைவர் லெட்சுமன் பாரதிதாசனின் எழுத்துபூர்வ வேண்டுகோளின்படி மருந்தகம் தவிர நகரிலுள்ள அனைத்து கடைகளையும் மூடி பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கவுள்ளோம் என்றார்.