பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பெருதும் கவரப்பட்டவர் ஓவியா. இவருடைய இயல்பான நடவடிக்கைகளால் எல்லார் மனதிலும் விரும்பப்பட்ட ஒருவராக இருந்து வருகின்றார். பிக்பாஸ் வரலாற்றில் ஆர்மி உருவாக காரணமாக இருந்தது இவர் என்றே சொல்லலாம்.
காதல் சர்ச்சைகளிலும் சிக்கிய ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியினால் தான் அதிக கவனம் பெற்றார். பிக்பாஸ்க்கு பின் அவருக்கு படங்கள் வந்த போதிலும் பெரியளவில் வெற்றி கொடுக்கவில்லை. 90ml என்ற படத்தில் நடித்ததால் அவரின் பெயரும் களங்கமானது.
சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது ரசிகர்களுடன் Chat செய்யும் அவர் தற்போது #GoBackModi என நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.