சர்வதேச சந்தையில், மசகு எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை மீள ஆரம்பித்துள்ளன.
இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதுடன், மசகு எண்ணெய் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களாக, தொடர்ந்து உயர்ந்து வரும் மசகு எண்ணெயின் விலை தற்போது, பீப்பாய் 80 டொலரை கடந்துள்ளது.
தேவைக்கு ஏற்ப மசகு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்படாததே விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.