சித்தி விநாயகர் அறைக்கட்டளை நிறுவனத்தினரால் வறிய மாணவர்களுக்கான ஒரு தொகுதி பாடசாலை புத்தகப்பைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புலம் பெயர் தேசத்தில் உள்ள உறவுகளின் உதவியால் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்தல், கல்விசார் ஊக்குவிப்புத் திட்டங்களை வழங்குதல், வறிய மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள், வீடு அமைத்துக் கொடுத்தல் போன்ற செயற்திட்டங்களை ஜேர்மன் சுரகாட் சித்தி விநாயக அறைக்கட்டளை நிர்வாக சபையினரும், புலம் பெயர் தேசங்களில் உள்ளவர்களாலும் இந்தச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.