சிம்பு உடல் எடையை குறைத்ததன் பின்னர் அவருக்கு ஒன்றன் பின் ஒன்றாக படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். கடந்த மாதம் வெளியாகிய ஈஸ்வரன் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை முடித்து விட்டு சிம்பு பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் முடித்த பின் சிம்பு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. சிம்பு மன்மதன், வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து அவரின் 50 ஆவது திரைப்படத்தை இவரே இயக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்ததது பெரிய வரவேற்பை பெற்றது.