யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்குச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றஞ்சாட்டப்படவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், தண்டப்பணம் மற்றும் இழப்பீடு செலுத்தவும் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை வழிமறித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதன் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் , சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தினார்.
நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், சந்தேக நபரை குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட நிலையில் நீதிமன்று மூன்று மாத சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருடத்துக்கு ஒத்தி வைத்ததுடன் 1,500 ரூபா தண்ட பணம் விதித்தது.
அத்துடன் சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டது.