சீனாவின் கொரோனாவிற்கான சினோபார்ம் தடுப்பூசியை அவசரமாக பயன்படுத்த மொராக்கோ ஒப்புதல் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியானது தரம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு ஆகிய எதிர்பார்க்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறது, மேலும் எந்தவொரு பக்க விளைவுகளையும் அளிக்காது’ என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சினோபார்ம் உருவாக்கிய முதல் தொகுதி கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் ஜனவரி 27 அன்று மொராக்கோவுக்கு வரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் சினோபார்ம் மற்றும் பிரிட்டனின் ஒக்ஸ்போரட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றிலிருந்து 66 மில்லியன் மருந்தளவு கொரோனா தடுப்பூசியை வட ஆபிரிக்க நாடுகள் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.