எகிப்து தனது கொரோனா நோய்த்தடுப்புத் திட்டத்தைத் ஆரம்பித்துள்ளது. முதலாவது கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வில் மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் ஆகியோர் பங்கேற்றிருந்ததோடு சீனத் தயாரித்த சினோபார்ம் தடுப்பூசியை அவர்கள் செலுத்திக்கொண்டுள்ளனர்.
எகிப்து அரபு உலகின் அதிக மக்கள் தொகை கொண்டது. இங்கு 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்டதாகும். இந்நிலையில் சீனாவிடமிருந்தான தடுப்பூசியின் முதற்தொகுப்பினை கடந்த டிசம்பரில் பெற்றுக்கொண்டது.
அதன் பின்னர் அவர் கூறுகையில், தடுப்பூசியை அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் இதை இலவசமாகப் பெறுவார்கள், அது அவர்களின் உரிமையாகும். தடுப்பூசி வழங்குவதற்காக வரும் வாரங்களில் நாடு முழுவதும் 35 க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் அமைக்கப்படவுள்ளது. அதேநேரம், அனைத்து எகிப்திய குடிமக்களும் இணைவழி மூலம் பதிவுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
கெய்ரோவானது, பிரிட்டிஷ், சீன மற்றும் ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து மொத்தம் சுமார் 100 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாத தொடக்கத்தில், 40 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதாகவும் அதில் பெரும்பாலும் அஸ்ட்ராசெனெகா ஃ ஆக்ஸ்போர்டு ஜோப், ஆகியன உள்ளடங்கும் என்றும் இது எகிப்து மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு போதுமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் எகிப்திய மக்கள் அனைவரும் தடுப்பூசி பெறுவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன், ஆனால் முகமூடி அணிவது உள்ளிட்ட சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தடுப்பூசி ஒரு மாற்று அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஜனாதிபதி அப்தெல் பத்தா அல்-சிசி ‘தடுப்பூசி இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது சுகாதார ஊழியர்களை அடுத்து நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பின்னர் வயதானவர்களுக்கு தடுப்பூசியை வழங்கத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறினார்.
எகிப்தில் கிட்டத்தட்ட 9,000 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு 160,000க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், இந்த வார தொடக்கத்தில், உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்கா மற்றும் அப்பிராந்தியங்களில் உள்ள நாடுகள் தடுப்பூசிகளுக்கான விலைகளை அதிகரிப்பதால் இருதரப்பு ஒப்பந்தங்கள் பின்வாங்கப்படும் அபாயத்தில் உள்ளது’ என்று எச்சரித்தது.
கொரோனா வைரஸ் எதிராக தனது தடுப்பூசி 79 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக சினோபார்ம் கூறுகிறது. சீஷெல்ஸின் இந்தியப் பெருங்கடல் தீவு இந்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக அதன் மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியது, அவ்வாறு செய்த முதல் ஆப்பிரிக்க நாடு சீஸெல்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.