சீனா நன்கொடையாக வழங்கிய சினோபார்மின் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டுள்ளதாக என்று அந்நாட்டின் சுகாதாரதுறைக்கான பிரதமரின் விசேட பிரதிநிதி வைத்தியர் பைசல் சுல்தான் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சீனாவிலிருந்து 5 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளுடன் பாகிஸ்தானின் விமானப்படையின் விசேட விமானம் இஸ்லாமபாத்தை 01ஃ02ஃ2021அன்று சென்றடைந்தது.
இதனையடுத்து வைத்தியர் பைசல் சுல்தான், தடுப்பூசிகயை அனுப்பி வைத்த சீனாவுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு, தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) மற்றும் மாகாண நிர்வாகங்கள் கொரோனாவைக் கையாள்வதில் முக்கிய பங்கு வகித்தன.
கிடைக்கப்பெற்ற கொரோனா தடுப்பூசிகள் முதலில் முன்களத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களுக்கு போடப்படும் என்றும். சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கு நன்றிகதை; தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
தடுப்பூசியை பதிவு செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் சுகாதார அமைச்சகம் எளிதான மற்றும் வெளிப்படையான வழிமுறையை வகுக்க வேண்டும் என்றும் தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் விபரங்களின்படி, இஸ்லாமாபாத்தில் தடுப்பூசி சேமிப்பதற்கும், பல்வேறு பிரிவுகளுக்கு குறிப்பாக சிந்து மற்றும் பலூசிஸ்தானுக்கு வான் வழியாக தடுப்பூசிகளை விநியோகிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மாகாண மற்றும் மாவட்ட அளவிலான தடுப்பூசி நிர்வாகத்துடன் கொரோனா தடுப்பூசி விநியோகப் பணிகள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதோடு, வளர் முக நாடுகளுக்கு கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்கான உலகளாவிய திட்டத்தின் கீழ் அஸ்ட்ராசெனெகாவின் 17 மில்லியன் டோஸ் தடுப்பூசியைப் பெறவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் 1,615 புதிய நோய்த்தொற்றாளர்களும் மற்றும் 26 உயிரிழப்புக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு மொத்தமாக 546,428பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11,683 இறப்புகள் பதிவாகியுள்ளன.