கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஆரம்பம் முதலே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து வரும் சில விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய சீனா தடை விதித்தது இதற்கு பதிலடி தரும் விதமாக சீனா செல்லும் 44 விமானங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என சீனா கண்டித்துள்ளது. சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 3 வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சீனாவில் கடந்த வார இறுதியில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆயிரக்கணக்கான விமானங்களை சீனா ரத்து செய்துள்ளதோடு, கொரோனா பரிசோதனைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.