சீனா மற்றும் தாய்வான் இடையே 40 வருடங்களில் இல்லாதளவு பதற்றம் நிலவுவதாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையே தற்செயலான தாக்குதல் நடைபெறக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். நான்கு நாட்களாக தொடர்ந்து தாய்வானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தொடர்ந்து ராணுவ விமானங்களை ஏவிவருவதை அடுத்து தாய்வான் அமைச்சரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டிற்குள் தாய்வானை முழுவதுமாக சீனா கைப்பற்றும் என்றும், தாய்வானின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற குழு சார்பாக பேசிய போது, ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பலை உருவாக்கும் பல மில்லியன் டொலர் மதிப்பிலான வரைவு ஒன்றையும் பரிசீலிக்குமாறு தெரிவித்துள்ளார். சீனாவிடம் தாய்வானை ஆக்கிரமிக்கும் திறன் உள்ளது என்று ஒப்புக் கொண்டுள்ள அவர் வரும் வாரங்களில் அது மேலும் எளிதானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் .