இமாச்சலப் பிரதேசத்தின் காங்ரா விமான நிலையத்துக்கு வந்த தலாய்லாமாவிடம், அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியான தவாங்கில் இந்திய-சீன ராணுவம் இடையிலான மோதல் குறித்து கருத்து கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த தலாய் லாமாகூறுகையில், ‘‘தற்போது ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியாவில் பல விஷயங்களில் முன்னேற்றம் உள்ளன. சீனாவும்தற்போது வளைந்துகொடுத்து செல்கிறது.
ஆனாலும், நான் சீனா திரும்புவதில் அர்த்தம் இல்லை. நான் இந்தியாவில் இருப்பதை தான் விரும்புகிறேன்.இது தான் சிறந்த இடம். பண்டிட் நேருவுக்கு காங்ரா மிகவும் பிடித்த இடம்.இந்த இடம்தான் எனது நிரந்தர இல்லம். கையில் லேசான வலியை தவிர எனதுஉடல் நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்றார்.