சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு கோவிட் -19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவரிடம் நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
எனினும் அன்டிஜன் பரிசோதனைக்கு மேலதிகமாக அவரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுகூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுக்காக காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சில் பணியாற்றுபவர்களில் சிலருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாள்களில் கண்டறியப்படும் நிலையில் சுகாதார அமைச்சருக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.