தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கிய சிறப்பு அதிரடிப்படையினர் அரசாங்கத்தினால் திடீரென மீளப்பெறப்பட்டுள்ளது.
திடீர் உத்தரவை அடுத்து, சிறப்பு அதிரடிப்படையினர், பாதுகாப்பை விலக்கிக் கொண்டதாகவும், அதற்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவின் உத்தரவின் பேரிலேயே, சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில், சிறப்பு அதிரடிப் படை பாதுகாப்புடன் பங்கேற்றமை தொடர்பாக, ஆராய்வதற்காகவே, சுமந்திரனின் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்தும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.