இந்திய இழுவைப் படகுகள் தங்களுடைய பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை இழுத்துச் சென்றுவிட்டன என சுழிபுரம் மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் கவலை கொண்டுள்ளனர்.
‘எமது கரையிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூர எல்லைக்குள் நின்று, மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது இந்திய இழுவைப் படகுகள் தங்களது வலைகளையும் இழுத்துச் சென்றுவிட்டன’ எனப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
இழுவைப் படகுகளைக் கண்டவுடன் சிலர் தங்களுடைய வலைகளை படகுகளுக்குள் ஏற்றிக்கொண்டதால், அவ்வாறானவர்களின் வலைகள் தப்பிக்கொண்டன எனத் தெரிவித்த அவர்கள் 21.02.2021 அன்று இரவு வந்ததைப் போல, எந்தவொரு நாளிலும் இழுவைப்படகுகள் வந்ததில்லை.
இதுதொடர்பில், பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளோம் எனத் தெரிவித்த பாதிக்கப்பட்ட மீனவர்கள், வங்கிகளிலும் நிதி நிறுவனங்களிலும் கடன்களைப் பெற்றுத்தான் தொழிலுக்கு முதலீடு செய்து, வலைகளையும் கொள்வனவு செய்து தொழில் செய்கின்றோம் எனத் தெரிவித்த மீனவர்கள், பெற்ற கடனைக் கூடச் செலுத்தி முடிக்கப்படாத நிலையில், இப்படியான செயற்பாடுகள் இடம்பெறுவதனால் கடன்களை மீளச் செலுத்த முடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றனர்.