இரத்தினபுரி – பெல்மடுல்ல பகுதியிலுள்ள தனியார் காணியொன்றிலிருந்து எடுக்கப்பட்ட உலகிலேயே பெரிய இரத்தினக்கல் கொத்தணி, சுவிட்ஸர்லாந்துக்கு மிக பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இரத்தினக்கல் மற்றும் அகழ்வு பணி சார் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்த தெரிவிக்கின்றார்.
இந்த இரத்தினக்கல் கொத்தணியை உறுதிப்படுத்தும் ஆவணத்தை பெற்றுக்கொள்வதற்காகவே, குறித்த கல் கொத்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சுவிட்ஸர்லாந்தில் இரத்தினக்கல் கொத்து குறித்து முழுமையான ஆய்வுகள் நடத்தப்பட்டு, தரச்சான்றிதழ் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்தே, சர்வதேச இரத்தினக்கல் சந்தையில் இந்த இரத்தினக்கல்லை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.