சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மொரீசியசுக்கு, விமானங்களை இயக்க அனுமதிக்குமாறு இந்திய மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் சர்வதேச விமான சேவைகளுக்கு இருந்த தடை ஒக்டோபர் 31 ஆம் நாள் வரை மத்திய அரசு நீடித்துள்ளது.
கடந்த 19 மாதங்களாக சென்னையில் இருந்து மொரீசியஸ், மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை நடைபெறவில்லை.
தமிழ்நாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய கல்விக்காக மொரீசியஸ் செல்லக்கூடிய நிலை உள்ளது. இதனால், மொரீசியஸ் மற்றும் யாழ்ப்பாணத்துக்கு வாரத்துக்கு ஒரு சிறப்பு விமானம் இயக்க மத்திய அரசுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.