சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையான சசிகலா 08.02.2021 சென்னை வருகின்றார்.
பெங்களூருவில் இருந்து காரில் சென்னை வரும் அவருக்கு வழி பூராகவும் வரவேற்பு கொடுக்க அ.ம.மு.க. கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சசிகலா தியாகராய நகருக்கு செல்லும் வழி பற்றிய தகவல் பொலிஸாருக்கு அ.தி.மு.க. கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சசிகலா அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் செல்வார் என்ற தகவல் இல்லை.
இந்நிலையில், சசிகலா திடீரென அந்த 2 இடங்களுக்கும் சென்றால் அதை தடுத்து நிறுத்தும் வகையில் அந்த இரு பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.