மாத்தளை, களுதேவல பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூத்த சகோதரன் தனது இளைய தம்பியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (12) மாலை குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுதேவல பகுதியினை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.