உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.
பகை அகலும் நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிட்டும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நூதன பொருட் சேர்க்கை உண்டு.
நல்லவர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முன்பின் தெரியாதவர்கள் கூட ஒத்துழைப்பு செய்வர். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டிய நாள். கடல் தாண்டி வரும் செய்தி நல்ல செய்தியாக வரும். அரசியல்வா திகளால் அனுகூலம் உண்டு. கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
உச்சரிக்கும் சொற்களில் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நாள். உறவினர்பகை உருவாகும். வரவைக் காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உண்டு.
எதிர்பாராத விரயங்கள் ஏற்படும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணியாளர்களை மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.
வரவு திருப்தி தரும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள்.
வம்பு வழக்குகளை சமாளித்து வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் உதவி கிட்டும்.
வருமானம் உயரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். பக்கத்து வீட்டாரின் பகை மாறும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கட்டிடப் பணியில் இருந்த தேக்க நிலை மாறும். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
பணியில் ஏற்பட்ட தேக்க நிலை அகலும் நாள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள்.
நன்றி – மாலைமலர்