குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது, சிறுமி இறந்த மறுநாள் உடல் நலக்குறைவு காரணமாக ரிஷாத் பதியுதீன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் ஒரு தனி கழிப்பறையைப் பயன்படுத்தியுள்ள நிலையில், அவர் ஒவ்வொரு நாளும் அதைப் பயன்படுத்தச் சென்ற போது, சிஐடி அதிகாரிகள் அவதானத்துடன் இருந்துள்ளனர்.
அதன்படி, அவர் இன்று கழிப்பறைக்குச் சென்று போது ரகசியமாக ஒரு துண்டு காகிதத்தை தனது உள்ளங்கையில் வைத்திருந்ததை சிஐடி அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கழிப்பறைக்குள் சென்று கையில் இருந்த காகிதத் துண்டை ஜன்னலுக்கு வெளியே எறிந்துள்ளார். அப்போது அங்கு இருந்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அதை எடுத்து பரிசோதித்த போது அதில் பல மாத்திரைகள் இருந்தமை தெரிய வந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தங்கியிருந்த 52 வது வார்டுக்குப் பொறுப்பான வைத்தியரிடம் மாத்திரைகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரை முற்படுத்திய போது, அவருக்கு குடிக்கக் கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தூக்கி எறியப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் பாராளுமன்ற உறுப்பினரின் சிகிச்சையை நிறைவு செய்து மீண்டும் சிஐடிக்கு அழைத்துச் செல்லுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டார்.