ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா (Fumio Kishida) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜப்பானிய பிரதமராக பதவியேற்ற யோஷிகிடே சுகா (Yoshihide Suga,) பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவரே பிரதமராக பதவி வகிக்கும் மரபு உள்ளது. பிரதமர் சுகா பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து, ஆளுங்கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது.
அதில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் புமியோ கிஷிடா (Fumio Kishida) ஆளும் லிபரல் ஜனநாயக கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 64 வயதான புமியோ கிஷிடா, (Fumio Kishida) ஜப்பானின் அடுத்த பிரதமராக வரும் ஒக்ரோபர் 4ஆம் நாள் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.