ஜேர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நதிகளின் கரை உடைப்பால் 70 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். ஜேர்மனியில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். பெல்ஜியத்தில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் மட்டும் இதுவரை 30 பேரின் உயிரிழந்தவர்களின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்துள்ளனர். ரைன்லேண்ட்-பலட்டினேட் மேலும் 19 போின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் ஷுல்ட்டிலிருந்த பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதுடன் மக்கள் பலரைக் காணவில்லை.
படகுகள் மற்றும் உலங்கு வானூர்தி மூலம் மக்களை வீடுகளின் கூரைகளில் இருந்து மீட்டுள்ளனர் மீட்பு முயற்சிகளுக்கு உதவ நூற்றுக்கணக்கான வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.
குறிப்பாக ஜேர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பெய்த கனமழையால் நதிகள் பெருக்கெடுத்ததைத் தொடர்ந்து அதிகம் பாதிப்படைந்துள்ளன. ஜேர்மனியில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

வெள்ளம் வற்றிய பின்னரே பலரது இறந்தவர்களின் உடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கொலோனுக்கு தெற்கே ரைன்-சீக் கவுண்டியில் உள்ள ஒரு அணை உடைந்து விடக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் ஸ்டெய்ன்பாக் நீர்த்தேக்கத்திற்கு கீழே உள்ள பல கிராமங்களை வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

