அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடனுக்கு சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான உறவை மீளமைக்க அழைப்பு விடுத்துள்ளது.
அத்துடன், உலக சுகாதார அமைப்பு மற்றும் பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரும் என்ற செய்தியை வரவேற்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
மேலும், பதவியேற்பு உரையில் பைடன் ‘ஒற்றுமை’ என்ற வார்த்தையைப் பலமுறை பயன்படுத்தியதாகவும், அந்த ஒற்றுமை அமெரிக்க – சீனா உறவுகளில் தற்போது தேவைப்படுவதாகவும் ஹுவா சுனிங் கூறியுள்ளார்.