நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பாடல் “இனிமே டிக் டோக் எல்லாம் வேணுமா” வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு திகதி அறிக்கப்பட்டுள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் வெளியீட்டுத் நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மார்ச் மாதம் 26 ஆம் திகதி டாக்டர் படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.