அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றிபெறப் போகின்றார்கள் என்பதை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது. உலகின் மிக சக்திவாய்ந்த பதவியாக கருதப்படும் அமெரிக்க அதிபருக்கான தேர்தல்கள் எப்போதுமே உலக மக்களால் ஆவலாக எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு முக்கியமான தேர்தல் ஆகும்.
இந்த தேர்தலின் மூலம் குடியரசுக் கட்சியின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடர்ந்து பேணுவதற்காக போட்டியிடுகின்றார். அமெரிக்க டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஜோ பிடன் அவரை எதிர்த்து போட்டியிடுகின்றார். COVID-19 தொற்று காரணமாக, முன்னெப்போதும் இல்லாத விதமாக நடந்த ஆரம்பகால வாக்களிப்பில் 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் ஏற்கனவே போடப்பட்டு விட்டன.
அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 நிலவரம்
அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் முன்னணியில் உள்ளார். வட கரோலினா உட்பட தேர்தலை தீர்மானிக்க உதவும் பிற இடங்களில் இன்னும் முன்னிலை தெளிவாகவில்லை. அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது ஜனநாயக போட்டியாளரான ஜோ பிடென் (Joe Biden) ஆகியோருக்கு இடையிலான அமெரிக்க அதிபருக்கான போட்டியில், நாடு 160 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. இது 67 சதவீத வாக்குகளாகும். அமெரிக்காவைப் பொறுத்தவரை இது ஒரு சாதனை அளவாகும்.
அதிபர் பதவியைக் கைப்பற்ற ஒரு வேட்பாளர் 270 தேர்தல் வாக்குகளைப் (Electoral Votes) பெற வேண்டும். முன்னதாக, டொனால்ட் டிரம்ப் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, வயோமிங் மற்றும் நெப்ராஸ்காவை ஆகிய இடங்களில் முன்னனியில் இருக்கின்றார்.
அமெரிக்க (America) ஊடக அறிக்கையின்படி, பிடன் 117 இடங்களிலும் டிரம்ப் 80 இடங்களிலும் முன்னிலையில் இருப்பார்கள் என முன்னரே கணக்கிடப்பட்டது. இது சி.என்.என், ஃபாக்ஸ் நியூஸ், எம்.எஸ்.என்.பி.சி / என்.பி.சி நியூஸ், ஏபிசி, சிபிஎஸ் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடகங்களின் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.