பொத்துவில் இருந்து பொலிகண்டி நோக்கிய போராட்டம் இறுதி நாளான இன்று (07.02.2021) ஏ9 வீதியூடாக பயணித்து இலக்கை அடையவுள்ளது.
யாழ்ப்பாணத்திற்குள் நுழைந்த பேரணி, நகரில் வலம் வந்து காங்கேசன்துறை வீதியால் பயணித்து, பரமேஸ்வரன் வீதியினால் பல்கலைக்கழத்தை அடைந்து, நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, முத்திரை சந்தையை நோக்கி நகர்கிறது.

இந்த போரணிக்கு பெருந்திரளான இளைஞர்கள் இன்று தமது ஆதரவை வழங்கியிருந்தமை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. யாழ் பல்கலைக்கழக இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட மண் பல்கலை மாணவர்களிடம் பல்கலைக்கழக வாயிலில் வைத்து வழங்கப்பட்டது.