தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
அத்துடன், மே இரண்டாம் திகதி (கிட்டத்தட்ட ஒரு மாதம்) வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் மார்ச் 12ஆம் திகதி ஆரம்பமாவதுடன் மார்ச் 19 ஆம் திகதி முடிவடைகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 20 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளதுடன் வேட்பு மனு மீளப்பெறும் கடைசி நாள் மார்ச் 22 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதுச்சேரி மற்றும் கேரளா மாநிலங்களிலும் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.