தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினரும் இன்று (17) நேரடிப் பேச்சில் ஈடுபட்டனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முன்னெடுத்து வரும் ஒற்றுமை முயற்சியின் ஒரு அங்கமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.
எனினும், இலங்கை தமிழ் அரசு கட்சி இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சந்திப்பை ஏற்பாடு செய்த ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசாவிற்கு தொலைபேசி வழியாக அழைப்பு விடுத்திருந்தார். எனினும், இந்த சந்திப்பில் மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பில் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவில்லை.
எமது ஒற்றுமை முயற்சி பதவியை, தலைமையை நோக்கமாக கொண்டதல்ல, மக்கள் நலன் சார்ந்தது என கூட்டத்தின் ஆரம்பத்தில் ரெலோ தரப்பால் கூறப்பட்டது. எனினும், எமது கூட்டணி சார்பில் கலந்து கொண்ட சுரேஷ் பிரேமச்சந்திரன் கொஞ்சம் காட்டமாக கருத்து தெரிவித்தார்.
ஏற்கனவே 10 கட்சிகள் ஒற்றுமை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழ் தேசிய பேரவை பற்றி நான் கருத்து தெரிவித்தது பிழையென தமிழ் அரசு கட்சி குழப்பியது. ரெலோவும் அதை ஆதரித்து அறிக்கை வெளியிட்டது. அது பிழையென்றால், அது பற்றி கலந்துரையாடியிருக்கலாம். அதை விட்டு, குழப்புவதை போல நடந்து விட்டு, இப்போது புதிய கூட்டணி முயற்சிக்கு ஏன் வருகிறீர்கள் என செல்வம் அடைக்கலநாதனிடம் கேள்வியெழுப்பினார் சுரேஷ்.
பழைய முயற்சிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து அதனையே தொடரலாமென்றும் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். எனினும், ஒற்றுமை முயற்சியின் அவசியத்தை எமது தரப்பின் ஏனைய இரண்டு கட்சிகளாக தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி இரண்டும் ஏற்றுக்கொண்டன. ஆனால் அது தொடர்பில் தொடர்ந்து பேச வேண்டுமென அவர்கள் குறிப்பிட்டனர்.
இந்த கூட்டத்தின் ஆரம்பத்திலேயே “செல்வம் உங்கள் முயற்சி பெயிலியர்“ என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். மாவை சேனாதிராசா கலந்து கொள்ளவில்லையென்பதால் அப்படி தெரிவித்தார்.
எனினும், ரெலோ பிரமுகர் ஒருவர் காட்டமாக தெரிவித்தார். “அப்படியல்ல. இது
இரண்டு தரப்பும் கலந்துரையாடிய பின்னர், இந்த சந்திப்பை தொடர்வதென முடிவாகியது.
இறுதியில் விக்னேஸ்வரன்-
நாம் என்ன அடிப்படையில் சேர்ந்தியங்குவதென்பதை தீர்மானிக்க வேண்டும். தமிழ் தேசிய பேரவையா, கூட்டணியா, அல்லது வேறு வடிவமா என்பதை தீர்மானிக்க வேண்டும். எந்த பிரச்சனைகளில் சேர்ந்தியங்குவது என்பதையும் தீர்மானிக்க வேண்டும். அதற்காக முதலில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை பட்டியலிடுவோம். அதில் எதில் இணைந்து செயற்படுவது என்பதை தீர்மானிப்போம் என கூறினார்.