நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று கண்டி, தலதா மாளிக்கைக்கு விஜயம் செய்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பகலேவும் இந்த பயணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ஏனைய மூன்று உயர் அதிகாரிகள் குழுவுடன் இலங்கைக்கு வந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் ஒக்டோபர் 5 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேற உள்ளார்.