ஆப்கானிஸ்தானில் தேவைப்பட்டால், தலிபான் அரசுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற மக்கள் முயன்றதால் ஏற்பட்ட பதற்றம் சற்று தணித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வுகாண அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம் என்றும் கூறியுள்ள பொறிஸ் ஜோன்சன், ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்தின் புகலிடமாக அமைந்து விடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.