வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (04.02.2021) மாலை மீட்கப்பட்டுள்ளது.
எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளார். தலைப் பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை வீட்டிலிருந்த நிலையில் மாலை காணியின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.