நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
நடிகர் அஜித், தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ஒரு சண்டைக் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதனை விரைவில் வெளிநாட்டில் படமாக்கவுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த செல்பி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மொட்டையடித்தபடி புது லுக்கில் இருக்கும் அஜித்துடன் ரசிகர்கள் மற்றும் காவல்துறையினர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சென்னை ரைபில் கிளப்பிற்கு அஜித் வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.