சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவதை வழக்கமாக பார்த்து வருகிறோம். அப்படி எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து நடிகர்கள், அரசியல்வாதிகளாக மாறுவதை பார்க்கிறோம்.
அப்படி இப்போது ஒரு நடிகர் அரசியலில் ஈடுபடுவதாக செய்திகள் வந்தன, அவர் வேறுயாரும் இல்லை தளபதி விஜய் தான்.
நேற்று அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்க தனது கட்சி பெயரை பதிவு செய்துள்ளார். அந்த அறிவிப்பு வந்ததுமே எனது அப்பாவிற்கு எனக்கும் அரசியலில் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அரசியலில் இல்லை, அது எனது அப்பாவின் தனிப்பட்ட விருப்பம் என்று தெளிவுப்படுத்தினார். இந்த நிலையில் அப்பாவின் இந்த செயல் பிடிக்காமல் போக கடந்த 4 மாதங்களாக விஜய் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.