மேஷம் – நல்ல செய்தி இல்லம் தேடிவரும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வருமானம் போதுமானதாக இருக்கும்.
ரிஷபம் – நந்தி வழிபாட்டால் நலம் காணவேண்டிய நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. இடம், வாங்க, விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மிதுனம் – யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உறவினர்களால் தொல்லை ஏற்படலாம்.
கடகம் – திருமண முயற்சி கைகூடும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். கூட்டுத் தொழிலை தனித்தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும்.
சிம்மம் – சிந்தனைகள் வெற்றி பெறும். நாள். திடீர் வரவு உண்டு. எதிரிகளின் பலம் குறையும். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர் உதவி கிடைக்கும்.
கன்னி – பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். பயணத்தால் விரயம் உண்டு. புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
துலாம் – நிதி நிலை உயரும் நாள். பெற்றோர் வழியில் அனுகூலம் உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை.
விருச்சகம் – ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வி.ஐ.பி.க்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
தனுசு – மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். சுபகாரியச் செலவு உண்டு. கொடுத்த வாக்கைக் கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள்.
மகரம் – குடும்பச்சுமை கூடும் நாள். குழந்தைகள் நலனில் கூடுதல்அக்கறை தேவை. உத்தியோக முயற்சி தாமதப்படும். சமூகத்தில் உயர்மட்டத்தில் உள்ளவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் – பங்குதாரர்களோடு பகை ஏற்படும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை அதிகரிக்கும். தொலைதூரப் பயணம் செய்ய எடுத்த முயற்சி தாமதப்படும். புதிய வேலைவாய்ப்பு பற்றிச் சிந்திப்பீர்கள்.
மீனம் – முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
source: maalaimalar