மேஷம்: பிரச்னைகளை சாமர்த்தியமாகப் பேசித் தீர்வு காண்பீர்கள். நண்பர்கள் வீட்டு விஷயங்களுக்கு நிறைய உதவி செய்வீர்கள். சிறிய அதிர்ஷ்டம் ஒன்று குடும்பத்துக்கு மகிழ்ச்சி தரும்.
ரிஷபம்: பணியிடத்தில் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பத்தை தீர்த்து வைப்பீர்கள். விருந்தினர்களை உபசரிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்
மிதுனம் : வெளியூரிலிருந்து வருபவர் நல்ல செய்தி கொண்டு வருவார். தான தர்மம் செய்து பலரின் வாழ்த்தைப் பெற்று மகிழ்வீர்கள். புதிதாகச் சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும்
கடகம்: நாடி வந்தோருக்கு உதவி செய்து மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். கீழே பணிபுரிபவரின் பிரச்னைகளை நல்லபடியாக பேசி முடிப்பீர்கள்.
சிம்மம்: உறவினர்கள் மத்தியில் பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்கும். புதிய விஷயங்களில் இறங்குவதற்கு முன் யோசித்துச் செய்யுங்கள். இன்று மேலதிகாரிகளால் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி: குடும்ப வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் கடமை முடியும். ஒரு சிலருக்குப் பணியிட இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விட வேண்டாம்.
துலாம்: பிள்ளைகளின் செயலால் குடும்பத்திற்கு நன்மை நடைபெறும். நீங்கள் திட்டுமிட்டுச் செய்யும் எந்தவொரு விஷயமும் ஜெயிக்கும். உதவிக்காக தவறான நபர்களை அணுக வேண்டாம்.
விருச்சிகம்: நடுநிலையான செயலின் காரணமாக பாராட்டப்படுவீர்கள். இன்று குழந்தைகளுக்கு நல்வாழ்வு கிடைக்க ஏற்பாடாகும். மனதின் பளு குறைவதால் உற்சாகம் கூடுதலாகும்.
தனுசு: நல்ல திட்டங்கள் தீட்டுவீர்கள். பாதுகாப்பாக உணர்வீர்கள். அக்கம் பக்கத்தினரால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். போட்டி, பொறாமையால் பிரச்னையை சந்திக்க நேரிடும்.
மகரம்: சிறு சங்கடங்கள் இருக்கும். எதிர்பாராத செலவு உண்டு. நேற்றைய கவலைகள் தீர்ந்து நிம்மதியாக உணர்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய அனுமதி கிடைக்கும்.
கும்பம்: வழிபாட்டில் இத்தனை காலம் இல்லாதிருந்த நம்பிக்கை வரும். பல நாளாக வாடகை சம்பந்தமாக இருந்த மனஅழுத்தம் தீரும். கடந்த காலத்தை திரும்பி பார்த்து திருத்திக் கொள்வீர்கள்.
மீனம்: திட்டமிட்ட விஷயம் ஒன்றை மாற்றி அமைக்க நேரிடலாம். பல கால வருத்தங்கள் மாறும். மனம் விட்டுப் பேசுவீர்கள். யாரை நம்ப வேண்டும் என்பது தீர்மானமாகும். வேலை அதிகரிக்கும்.
நன்றி – தினமலர்