தென்மேற்கு சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தில் 2,800 5ஜி அடிப்படை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன என்று உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் அனைத்து ‘ஏ’ தர அழகிய இடங்களிலும் முழுமையான தொலைபேசிகளுக்கான வலையப்புக்கான சமிக்ஞைகள் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிடும் உள்ளுர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
சுற்றுலா வசதிகளின் கட்டுமானமும் இப்பகுதியில் முடுக்கிவிடப்பட்டுள்ளதோடு சராசரியாக 4,000 மீற்றர் உயரத்திலும், கடுமையான இயற்கை சூழலிலும் தொலைபேசிக்கான சமிக்ஞை வசதிகள் உள்ளன.
இப்பகுதியில் தற்போது மொத்தம் 116 ஏ தரத்திலான கண்ணுக்கினிய இடங்கள் உள்ளன, அவற்றில் பிராந்திய தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை உட்பட ஐந்து இடங்கள் 5ஜி தரதரவரிசையில் உள்ளன,
2020ஆம் ஆண்டில் திபெத் 35.05 மில்லியன் பார்வையாளர்களைக் கண்டது, மொத்த சுற்றுலா வருவாய் 36.64பில்லியன் யுவானை (சுமார் 5.66 பில்லியன் யு.எஸ். டொலர்கள்) எட்டியுள்ளது என்று பிராந்திய சுற்றுலா பணியகம் தெரிவித்துள்ளது.