பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்து கொண்ட ஜெயஸ்ரீ ராமையா தன் வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கியது இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டது குறித்து அறிந்த கன்னட திரையலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவர் மன அழுத்தத்துடன் போராடி வருவது தொடர்பாக அவரை பற்றி அவ்வப்போது பேசப்பட்டது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 22ம் திகதி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நான் விலகுகிறேன். இந்த உலகத்திற்கும், மன அழுத்தத்திற்கும் குட்பாய் என்று போஸ்ட் போட்டார்.
அதை பார்த்த ரசிகர்கள் ஜெயஸ்ரீ தற்கொலை தான் செய்யப் போகிறாரோ என்று பதறியடித்துபொலிஸுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு ஜெயஸ்ரீ அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டு, நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன் என்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார்.
பின்னர் ஜூலை மாதம் 25ம் திகதி ஃபேஸ்புக் லைவில் வந்த ஜெயஸ்ரீ கூறியதாவது, இதை எல்லாம் நான் விளம்பரத்திற்காக செய்யவில்லை. நான் சுதீப் சாரிடம் இருந்து நிதியுதவியை எதிர்பார்க்கவில்லை. என்னால் மன அழுத்தத்துடன் போராட முடியவில்லை. அதனால் மரணத்தை மட்டுமே எதிர்பார்க்கிறேன். எனக்கு நிதி பிரச்சினை எல்லாம் இல்லை, மன அழுத்தம் மட்டுமே. எனக்கு நிறைய தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளது. நான் தோற்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அவர் நேற்று தன்னுடைய வீட்டில் மன அழுத்தம் அதிகரித்த நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெயஸ்ரீயின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள்.
நன்றி – சமயம்