யாழ்.தொண்டமனாறு கடல்நீரோியில் (சின்னக்கடல்) குளிக்க சென்றிருந்த 18 வயதான இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போயிருக்கும் நிலையில் சுமார் ஒன்றரை மணிநேர தேடுதலுக்கு பின் மீட்கப்பட்டபோதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளான்.
நண்பர்களுடன் கடலில் நீரோியில் குளிக்க சென்றிருந்த இளைஞன் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் அவருடன் சென்றவர்கள் வழங்கிய தகவல் அடிப்படையில் தேடுதல்
மேற்கொள்ளப்பட்டது.
சம்பவத்தில் உயரிழந்த இளைஞன் உடுப்பிட்டி சந்தையடியை சேர்ந்த நல்லைநாதன் அவர்காஸ் (வயது18) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.