நடிகர் மாதவனின் கலைச் சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதவன், இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தவர். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மாறா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், நடிகர் மாதவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. மாதவனின் கலைச் சேவையை பாராட்டி, கோலாபூரில் உள்ள டி.வை. பாட்டில் பல்கலைக்கழகம் அவருக்கு இந்த டாக்டர் பட்டத்தை வழங்கி கெளரவித்துள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற மாதவனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.