தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் 50 அலுவலக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் சேவையில் ஈடுபடாத சில புகையிரதங்களில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்ப கோளாறுகள், மின் கோளாறுகள், ஆசனங்களில் திருத்தங்கள், பெயின்ட் வேலைப்பாடுகள் மற்றும் தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்க முடிந்ததாக ரயில் போக்குவரத்து ஒழுங்குகள் பிரிவினர் தலைமை பொறியியலாளர் கே.ஜீ.எஸ் பண்டார தெரிவித்தார்.
அத்தோடு, தற்போது 91 புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதான புகையிரத மார்க்கத்தில் 33 சேவைகளும், சிலாபம் மார்க்கத்தில் 14 சேவைகளும், வடக்கு மார்க்கத்தில் இரு புகையிரத பயணங்களும், களனிவெளி மார்க்கத்தில் 8 புகையிரத சேவைகளும் கடலோர மார்க்கத்தில் 34 புகையிரத பயணங்களையும் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.