மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறையிலுள்ள சசிகலா, தனது தண்டனைக் காலம் முடிவடைந்து, வரும் ஜனவரி 27 திகதி விடுதலையாகவிருக்கிறார்.
இந்த நிலையில் மூச்சு திணறல் காரணத்தால் மருத்துவமனையில் சசிகலாவுக்கு எடுக்கப்பட்ட சி.டி ஸ்கேன் முடிவுகளில் அவருக்கு நுரையீரலில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தநிலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக சிறை மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர்ந்து பெங்களூரு சிவாஜி சாலையில் உள்ள பவ்ரிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பவ்ரிங் அரசு மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் இயங்காததால் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சி.டி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
அதையடுத்து அவரின் உடல்நிலை குறித்த தகவலை மருத்துவமனை வெளியிட்டிருக்கிறது. அந்த ஸ்கேன் முடிவுகளில் அவருக்குத் தீவிர நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. அதோடு உடலின் சக்கரை அளவும் கூடியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. சசிகலா தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.
நன்றி – விகடன்
படம் – ANI