யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நெடுந்தூர போக்குவரத்து நிலையம் இன்று (27.01.2021) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி கரையோரப் பாதுகாப்பு கழிவுப்பொருட்கள் மற்றும் சமுதாய தூய்மைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவின் பணிப்புரைக்கு அமைய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுசரணையில் 122 மில்லியன் ரூபா நிதியில் செலவில் அமைக்கப்பட்டதாகும்.
பேருந்து நிலைய பெயர்ப்பலகை திரையினை வடமாகாண ஆளுநர் எச்.எம். சார்ள்ஸ் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளனர்.