நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். இன்றைய உலகின் போக்கைப் பொறுத்தவரை இது எத்துணை உண்மையானது என்பதை பலரும் உணர்ந்திருப்பர்.எவ்வளவுதான் செல்வங்களைச் சேர்த்து சேர்த்து பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் நோய் உள்ள ஒருவன் செல்வமிருந்தும் வறுமையானவன் என்ற வகைக்குள்ளேயே அடக்கப்படுவான்.
நோய் இல்லாமல் நாம் எப்படி வாழலாம் என தோன்றுகிறதா?-நோய் இல்லாத மனிதன் இல்லை, மனிதனைத் தொடாத நோயும் இல்லை. அவ்வாறு அண்மையில் தொட்ட நோய் தான் கொரோனா. ஏழை, பணக்காரன், கறுப்பன், வெள்ளையன் என்ற எந்தவொரு பேதமும் பாராது அனைவரையும் ஒருகை பார்த்து நிற்கிறது கொரோனா.சரி, நோயில்லாமல் நாங்கள் வாழ்தல் என்பதைவிட நோயை எதிர்த்து வாழ்தல் என்பதுதான் மனித வாழ்வியலின் நிறுத்திட்டமான உண்மையாகும்.
நோயை எதிர்த்து வாழவேண்டுமாயின், நோய் எதிர்ப்பு சக்தி எமதுடலில் பேணப்படவேண்டும். மிக எளிதான ஒரு நடைமுறை இருக்கின்றது.
இதற்கு தேவையான பொருட்கள் – இரவில் ஊற வைத்த – 10 பாதாம் பருப்பு (தோல் நீக்கியது),இரவில் ஊற வைத்த – 5 பேரீச்சம் பழம் (விதை நீக்கியது),பசும் பால் – 1 கப்
◆மஞ்சள் தூள் – 1/4, டீஸ்பூன் ஏலக்காய் – 1/8 ◆டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன்
செய்முறை : மிக்ஸி ஜாரில் ஊற வைத்த பாதாம் பருப்பு, பேரிச்சம்பழம், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள், நெய், பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவேண்டும். நன்றாக வழுவழுப்பாக அரைத்த கலவையை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் தேன் கலந்து கொள்ளவேண்டும்.
இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் நம் உடலில் நோயை எதிர்க்கும் ஆற்றல் பெருகும் என கண்டறியப்பட்டுள்ளது. நமது முன்னோர் இதுபோன்ற இயற்கை விதிகளுக்கமைவாக நடந்தமையினாலேயே நூறு ஆண்டுகளைக் கடந்தும் வாழ்ந்தார்கள் என்பதை நினைவிற்கொள்ளுவோமாக.