வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது அதிகாரிகள் சிலருக்குகொரேனாதொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்,தனக்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தன்னுடன் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.