மேஷம்: மதிப்பு, மரியாதை உயர்வதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். பல நாள் எதிர்பார்த்த உயர்வு வரும். திட்டங்கள் தீட்டுவீர்கள். பணியிடத்தில் பாராட்டின் அடையாளமாக சிறு பரிசு வரும்.
ரிஷபம்: பிள்ளைகள் இன்று புதிய விஷயங்களை கற்பார்கள். சொத்து விற்பனை மூலம் ஒரு பெரும் தொகை கிடைக்கலாம். பணியிடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களுக்குத் தீர்வு வரும்.
மிதுனம் : தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்கப்பாருங்கள். அளவாக பழகுங்கள். விட்டு கொடுத்து செல்ல வேண்டி வரும். மற்றவர்கள் செய்த உதவிக்கு இன்று நன்றி சொல்வீர்கள்.
கடகம்: நெகிழ்ச்சி அடையும் படியான நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். சுபநிகழ்ச்சிகளில் சந்தோஷமாக கலந்து கொள்வீர்கள். ஆதரிக்க மாட்டார்கள் என்று நினைத்தவர்களின் அன்பு கிடைக்கும்.
சிம்மம்: மற்றவர்களின் விலை உயர்ந்த பொருளை கவனமாக கையாளுங்கள். பெரிய குறிக்கோள்களை தீர்மானித்து புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். பிரியமானவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.
கன்னி: இன்று சொந்த பந்தங்களிடம் இருந்து அன்பளிப்பு கிடைக்கும். பழைய மின்னணு சாதனங்களை கொடுத்து புதியது வாங்குவீர்கள். சகாக்களிடையே ஏற்படும் பொறாமை சங்கடம் அளிக்கும்.
துலாம்: ஆர்வமில்லாதிருந்த விஷயங்களில் புதிய ஆர்வம் பிறக்கும். திட்டமிட்டுச் செய்த யுக்திகளால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். தடைப்பட்ட அலுவலகப் பணி தொடரும். புது வருமானம் வரும்.
விருச்சிகம்: அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். பயம் நீங்கும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதியது வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்போரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.
தனுசு: வரவு கூடும். நண்பர்களுக்கு அதிக இடம் கொடுக்க வேண்டாம். புரியாதிருந்த பல விஷயங்கள் விளங்கும். நல்லவர்கள் உதவுவர். சமீபத்தில் சந்தித்த பழைய நட்பால் நன்மை ஏற்படும்.
மகரம்: பொறாமைக்காரர்களால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும். லாபம் வரும். ஒப்பந்தம் ஒன்றின் மூலம் நன்மை அடைவீர்கள். பொருளாதார சிக்கல்கள் விடுபட நடவடிக்கை எடுப்பீர்கள்.
கும்பம்: சட்டதிட்டத்தை மீற வேண்டாம். குடும்பத்தில் புரிதல் ஏற்படும். குழப்பங்கள் தீரும். கவனமாகச் செயல்பட்டு காத்துக் கொள்வீர்கள். உடற்பயிற்சியில் கவனம் அதிகரிக்கும். நிம்மதி வரும்.
மீனம்: உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைக்காத ஏக்கம் ஏற்படும். இன்று நல்ல செய்தி ஒன்று வரும். உங்களின் புகழ் கூடும். ஆரோக்ய நலனில் அக்கறை எடுப்பீர்கள். எண்ணம் நிறைவேறும்.
நன்றி – தினமலர்